இந்தியா

சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

மும்பை மற்றும் லக்னோவில் நடிகர் சோனு சூட்டின் வீடு உள்பட அவருக்குச் சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நடிகர் சோனு சூட் வீட்டில் வருமான வரித்துறை ஆய்வு- Dinamani

ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். கொரோனா ஊரடங்கு காலத்தில் மும்பை உட்பட பல இடங்களில் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவினார். இதன் வாயிலாக உலக அளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் எளிய மக்களின் ஆபத்பாந்தவனாக திகழ்ந்தார்.

ALSO READ  தலைநகரில் பரபரப்பு… கேட்பாரற்று கிடந்த பையில் காத்திருந்த அதிர்ச்சி!
ரஜினிக்கு நிகராக நடிகர் சோனு சூட்டுக்கு கிடைத்த கவுரவம்!

டில்லி அரசின் மாணவர்களுக்கான வழிகாட்டல் திட்டத்தின் விளம்பர தூதராக நடிகர் சோனு சூட் அறிவிக்கப்பட்டார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பாக நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என்று செய்திகள் வந்தன. இந்நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Rəsmi veb saytı bağlayın️ Sürətli ödənişlər, gündəlik bonuslar, bütün bunlar sizi pin up casinoda gözləyi

இதனிடையே ‘ரியல் எஸ்டேட்’ தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

நடிகர் சோனு சூட்டின் வீடு மற்றும் மும்பை அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை ஒருவழியாக நள்ளிரவில் முடிவடைந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Vulkan Vegas Bonus 25 Euro Vulkan Vegas Bonus 25 Euro Za Rejestracj

Shobika

வங்க கடலில் அம்பான் புயல்: எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிக்கை..

naveen santhakumar

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய இளைஞர்….

naveen santhakumar