உலகம்

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 96 வயதுடைய சுவானோ சுபோய் மரணம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பான்

உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவரும் ஜப்பானில் அணு ஆயுதங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சுவானோ சுபோய் 96-ஆம் வயதில் மரணமடைந்தார்.

1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி சுனாவோ சுபோய் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அன்றுதான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது.

The Hiroshima blast

அந்த அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட சுனோவோ சுபோய், உடல் முழுவதும் தீக் காயங்களுடன் போராடினார்.

அணுகுண்டு தாக்குதலால் ஹிரோஷிமாவில் சுமார் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த வலியை நேரில் கண்டும் அனுபவித்தும் உணர்ந்த சுவானோ சுபோய் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பிரச்சாரத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணிதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Bank Of Japan வரலாற்றில் முதல் பெண் நிர்வாக இயக்குநர் நியமனம்.

அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா 2016ம் ஆண்டு ஹிரோஷிமா சென்றவுக்குச் சென்றார். அப்போது பராக் ஒபாமா சுனோவோ சுபோய் இருவரும் கைகுலுக்கி ஒரு நிமிடம் பேசிக் கொண்டனர் என்பது முக்கியமான வரலாற்றுச் செய்தியாக பார்க்கப்பட்டது.

Hiroshima atomic bombing survivor Sunao Tsuboi dies at 96 – CBS17.com

அணுகுண்டு வெடித்த அன்று, பொறியியல் மாணவராக இருந்தசுவானோ சுபோய்க்கு 20 வயது. அணு ஆயுதங்களுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 6 அன்று நடைபெற இருந்த பிரச்சாரத்தில் நிர்வாணமாக சுமார் மூன்று மணி நேரம் ஓட முயற்சித்துள்ளார். ஆனால் அவரது உடல்நிலை ஓத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ஈக்வடார் நாட்டில் மருத்துவர் M.N. சங்கரின் அக்குபஞ்சர் மருத்துவமனை !

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய சுமார் 1,27,000 பேர் இன்னும் உயிருடன் உள்ளனர் என்பது வியப்பிற்குரிய செய்தி.

Hiroshima atomic bomb survivor Sunao Tsuboi dies at 96

அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான சுபோய்க்கு புற்றுநோய், ரத்தசோகை உள்ளிட்ட பிற நோய்கள் ஏற்பட்டன. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமையன்று மரணமடைந்ததாக அந்த அமைப்பின் நிர்வாகி அகிரா கவாசாகி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாட்டையை சூழற்றும் பைடன்: கடும் அதிருப்தியில் சீனா…! 

naveen santhakumar

போதும்… போதும்… வாங்க பூமிய காப்பாத்துவோம் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

News Editor

சூப்பர் மார்க்கெட் சென்ற செவிலியர்…. காத்திருந்த ஆச்சரியம்…

naveen santhakumar