தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு – இன்பார்க்ட் என்றால் என்ன ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Rajinikanth Admitted to Hospital in Chennai! - Pragativadi

சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது ரஜினிகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார்.

சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அங்கு சில நாட்கள் அவர் தங்கி இருந்துவிட்டு சென்னை திரும்பினார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைபெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார்.

மேலும், அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிகாந்துக்காக நேற்று சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.

ALSO READ  வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 
Rajinikanth Suffering From Infarction, Says Report - Filmibeat

இந்நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார். நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு காரில் சென்ற ரஜினி காரில் இருந்து இறங்கி நடந்தே மருத்துவமனை உள்ளே சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.

தற்போது ரஜினிகாந்த் காவேரி ஆஸ்பத்திரியில் உள்ள சாதாரண அறையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். ரஜினிகாந்தின் உடல்நிலை கவலைப்படும்படியாக எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ALSO READ  தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு :

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும்

ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், அது கிழிந்து போதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்கும்.

எனினும் இந்த பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ..!

naveen santhakumar

ஆன்லைன் ரம்மி: ரம்மி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..

Shanthi

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் :

naveen santhakumar