இந்தியா

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் – இனி 6 மாதங்களுக்கு இலவசம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் இலவச உணவு தானியங்கள் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, கொண்டை  கடலை | ration shop - hindutamil.in

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ‘பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ், 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி/கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று மாதங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில், இலவச ரேஷன் திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு !

மேலும் மத்திய அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் இலவச ரேஷன் திட்டத்தை தொடரக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.

இதனிடையே, உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு ஹோலி பண்டிகை வரை இலவச ரேசன் திட்டத்தை நீட்டித்து உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணம் !

News Editor

கொரோனா Hot Spot என்றால் என்ன..???

naveen santhakumar

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசு !

News Editor