தமிழகம்

10,583 பேருக்கு மானியம் – தமிழக அரசு அறிவிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம் ' - நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு  அரசாணை வெளியீடு..

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10, 583 பேருக்கு, 4 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரத்து ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

ALSO READ  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்..!

இதனையடுத்து, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 10,583 நபர்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கீழ் பணியாளர்கள் வாங்கும் இருசக்கர வாகனங்கள் 125சிசி மிகாமலும், வாகன விதிமுறை சட்டம் 1998 பதிவு செய்திருக்க வேண்டும்.

ALSO READ  மோடி பொங்கல் ரத்து…. அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 % அல்லது வாகனத்தின் விலையில் 25 ஆயிரம் ரூபாய் என எது குறைவோ அந்த தொகையை மானியமாக வழங்கப்படும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விழுந்துச்சு கல்….அடிக்குது ஷாக்…..

naveen santhakumar

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின் !

naveen santhakumar

பிரபல ஜவுளி கடை உரிமையாளர் மகனிடம் வெங்காயம் வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி

Admin