இந்தியா

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு… வெளியானது அட்டவணை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் 5 மாநிலங்களுக்கான தேர்தல் தொடங்கி மார்ச் 10 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும், மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் மொத்தம் 690 தொகுதிகளில் இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள் மற்றும் கோவாவில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளன.

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டம் – பிப்ரவரி 10, இரண்டாவது கட்டம்- பிப்ரவரி 14, மூன்றாவது கட்டம் – பிப்ரவரி 20 , நான்காவது கட்டம் – பிப்ரவரி 23, ஐந்தாவது கட்டம் – பிப்ரவரி 27, ஆறாவது கட்டம் – மார்ச் 3, ஏழாவது கட்டம் – மார்ச் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மணிப்பூரில் மட்டும் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ம் தேதி பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.


Share
ALSO READ  தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெற்றிகரமாக நடந்த உலகின் மிகநீண்ட விர்ச்சுவல் மாநாடு …!

naveen santhakumar

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்:

naveen santhakumar

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 2 வாரம் ஜாமீன்?

Shanthi