உலகம்

தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், ஜனாதிபதி டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் காரசாரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு, ஏகப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்கு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ  தேச துரோக வழக்கில் முஷாரப்பிற்கு மரண தண்டனை

இந்நிலையில், அமெரிக்காவில் தேர்தல் ஆய்வு அமைப்பான, “சென்டர் பார் ரெஸ்பான்சிவ் பாலிடிக்ஸ்” வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில்,நவம்பர் மாதம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தல் தான், மிக அதிகமான பணம் செலவழிக்கப்பட்ட தேர்தலாக, தேர்தல் வரலாற்றில் இருக்கும்.
ஏனெனில் இந்த தேர்தலுக்கு 80 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 1,03,98,50,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தெரிய வந்துள்ளது.

கடந்த, 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏற்பட்ட செலவை விட, இது இரு மடங்கு அதிகம். மேலும், நன்கொடை வாயிலாகவும் 6,650 கோடி ரூபாய்க்கு மேல் நிதி பெற்ற, முதல் ஜனாதிபதி வேட்பாளராக, ஜோ பிடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லிபியா தலைநகர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி மீது வான்வெளி தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு

Admin

பக்கவாதமாக மாறிய தலைவலி.. மாடல் அழகியின் பரிதாப நிலை

News Editor

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியரா????

naveen santhakumar