இந்தியா

மழை நிவாரணம் ரூ.5000… இன்று முதல் விநியோகம் தொடக்கம்!

Money
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலமே வெள்ளக்காடானது. வீடுகள், சாலைகள், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதையடுத்து கடந்த மாதம் 16-ம் தேதி சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம், மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அறிவிப்பிற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்ததால் ஒட்டுமொத்த மக்களுமே கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகினர். எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்தன. இதையடுத்து கடந்த 22-ம் தேதி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்கப்படும் என ரங்கசாமி அறிவித்தார்.

ALSO READ  தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - தொடங்கிய ரயில் டிக்கெட் முன்பதிவு!

இந்த அறிவிப்பின் படி ஒரு லட்சத்து 85 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டுக்கும், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மஞ்சள் ரேஷன் கார்டுக்கும் என ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 27 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.156 கோடி மழை நிவாரணமாக வங்கியில் செலுத்தப்படுகிறது. மழை நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் இன்று தொடங்கி வைத்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Bet Overview 2023: Comprehensive Betting Guide, Deposits, And Withdrawal

Shobika

விவசாய போராட்டம்; “உண்மையை உறுதிசெய்த பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும்,” சர்வதேச பிரபலங்களுக்கு மத்திய அரசு பதில் !

News Editor

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 17 பதக்கங்கள் பெற்று சாதனை

News Editor