ஜோதிடம்

தலையில் குத்திய கத்தி… ரத்தம் வழிய வீதிகளில் சுற்றிய நபர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்:-

அமெரிக்காவில் தலையில் கட்டிக்கொண்டு ரத்தம் வழிய வீதிகளில் சுற்றி நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஹார்லென் தெருவில் பகல் 11 மணியளவில் உச்சந்தலையில் கத்தி ஒன்று சொருகி இருக்க அதன் வழியாக ரத்தம் வழிய வீதிகளில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

View this post on Instagram

It’s going to be a crazy summer

A post shared by Publisher / Marketing (@fresh20s) on

ஒருபுறம் அமெரிக்காவில் கோரோனா மறுபுறம் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் நடைபெற்று வரும் சூழலில் பகல் நேரத்தில் நபர் ஒருவர் தலையில் கத்திகுத்தோடு திரிந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சம்ந்தபட்ட நபரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நியூயார்க் நகரப் போலிசார் கூறுகையில்:-

ALSO READ  தலிபான் ஆதரவு கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் எச்சரிக்கை …!

கத்திக்குத்துக்கு ஆளான நபர் 34 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருடன் வந்துள்ளார். அப்பொழுது மற்றொரு நபருடன் ஏற்பட்ட வாய் தகராறில் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர் அவரது தலையில் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் அந்த மர்ம நபர் அந்த பெண்மணியின் கன்னத்திலும் கத்தியால் கீறி விட்டு தப்பியுள்ளனர். மொத்தத்தில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் சம்பந்தப்பட்ட பெண்மணியிடம் இருந்து பையை திருடியுள்ளனர். அந்த பையில் செல்போன் மற்றும் மெடிக்கல் சம்பந்தப்பட்ட சில கார்டுகள் இருந்துள்ளது.

ALSO READ  கொரோனா குமாராக வருகிறார் 'சுமார் மூஞ்சி குமார்'... 

நியூயார்க் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் ராசல் கைமாவின் இளஞ்சிவப்பு நிற ஏரி :

naveen santhakumar

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது

naveen santhakumar

மறந்தும் கூட…… இந்த பொருட்களை யாருக்கும் தானமாக…. கொடுத்துவிடாதீர்கள்:

naveen santhakumar