ஜோதிடம்

மர்மங்கள் நிறைந்த குகை கோயில்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்து கோவில்கள் பலவும் அதிசயங்களும் ஆச்சர்யங்களும் வரலாறுகளும் நிறைந்திருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. ஒவ்வொரு திருத்தலங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய பாரம்பரியமும் வரலாற்றுப் பின்புலமும் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருக்கிறது. அப்படி மர்மம் நிறைந்த கோவிலான கேதரேஸ்வரர் குகை கோவில், ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் கோவில். இந்த கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மர்மங்கள் நிறைந்திருக்கின்றன.

இந்த மர்மங்கள் நிறைந்த குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் தான் இருக்கிறது. 6ஆம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட அதிசயக் கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இந்த கோவில் மட்டுமல்ல. இதற்கு அருகிலேயே கேதாரேஸ்வரர் என்னும் குகை ஒன்று இருக்கிறது. இந்த குகை மற்ற குகைகளைப் போல அல்ல. தண்ணீர் நிறைய இருக்கும் அந்த நீருக்கு நடுவே ஐந்தடி உயரத்தில் கம்பீரமாக ஒரு சிவலிங்கம் வீற்றிருக்கிறது.

இந்த லிங்கத்தைச் சுற்றியிருக்கிற தண்ணீர் ஐஸ் கட்டியைப் போல மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். தண்ணீரின் குளிரைத் தாண்டி சிவலிங்கத்தின் அருகில் சென்று வணங்குவது கொஞ்சம் கடினமான விஷயம். குறிப்பாக மழைக்காலங்களில் எல்லாம் இந்த குகைக் கோவிலுக்குள் செல்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த குகைக்குள் இருக்கிற சிவலிங்கத்தைச் சுற்றி நான்கு தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தூண்களும் நான்கு யுகங்களைக் குறிக்கிறதாம். ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும், ஒவ்வொரு தூணாக கீழே விழும் என்பது தான் நியதியாகும். அதன்படி ஏற்கனவே மூன்று தூண்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் விழுந்து விட்டனவாம். இன்னும் ஒரே ஒரு தூண் மட்டுமே மிச்சமிருக்கிறது. அந்த நான்காம் தூண் தான் கலியுகத்தைக் குறிக்கும் தூணாம். அந்த நான்காம் தூண் தான் இந்த பிரபஞ்சத்தையே தாங்கிக் கொண்டிருக்கிறதாம். இந்த தூண் விழும் நாள் தான் கலியுகத்தின் கடைசி நாளாக இருக்கும் என்று நம்பப்படுகிறது .

ALSO READ  மனித சிறுநீரைக் கொண்டு நிலவில் தயாராகும் கான்கிரீட்...


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக விலைகளை கடைபிடிக்க நெதர்லாந்து உணவகம் கண்டுபிடித்த சூப்பர் ஐடியா…

naveen santhakumar

தினமும் இந்த மனுசன் ஒருதர் தான் மேல வா மேல வான்னு மோட்டிவேட் பண்ணுராரு!

Admin

கொரோனா பாதிப்பால் மதுபானங்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய அரசு முடிவு

naveen santhakumar