சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அயலான்’ என பெயரிடப்பட்டுள்ளது.

Image result for அயலான்

கடந்த 2018ம் ஆண்டு இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பட்ஜெட் பிரச்சனையால் நின்றது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்தில், தற்போது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்நிறுவனமும் இணைந்துள்ளதால் படப்பிடிப்பு மீண்டும்துவங்கியுள்ளது.

ALSO READ  வலிமை அப்டேட்; டப்பிங் பணியை முடித்த அஜித் !
Image result for அயலான்

சயின்ஸ் பிக்‌ஷன் கதை என்பதால் இதில் 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

Image result for அயலான்

இந்நிலையில் படத்தின் டைட்டிலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ளார்.

Image result for அயலான்

‘அயலான்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் அறிமுக வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானின் அசத்தலான பிஜிஎம் இடம் பெற்றுள்ளது. இதனால் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“இதுவே என்னுடைய சிறந்த பிறந்தநாள்”;லோகேஷ் கனகராஜ் ட்வீட் !

News Editor

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை !

News Editor

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் !

News Editor