இந்தியா உலகம்

இந்திய வான்வெளியில் பறப்பதை தவிர்த்து மலேஷியா சென்ற இம்ரான் கான்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இரண்டு நாள் பயணமாக இன்று மலேஷியாவுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய வான்வெளியை பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளார்.

சமிபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டை தவறவிட்ட பின் அவர் மேற்கொள்ளும் மலேஷிய பயணம் இது. அங்கு Institute of Strategic and International Studies (ISIS) ல் உரையாற்ற உள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதல், காஷ்மீரில் அரசியல் சாசன பிரிவு 370 நீக்கம் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இரு நாட்டு உறவுகள் சீர் குலைந்துள்ளது. இந்நிலையில் தான் இந்திய வான்வெளி வழியாக பயணம் செய்ய வேண்டாம் என்ற இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.

ALSO READ  சீன தடுப்பூசியை செலுத்தி கொண்ட இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி !

ஏற்கனவே இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தனது வான் வெளி வழியாக பயணிக்க பாகிஸ்தான் அரசு ஏற்கனவே பல தடவை தடை விதித்திருக்கிறது.

கடந்த அக்டோபரில் பிரதமர் மோடியின் தனி விமானம் பாகிஸ்தான் மீது பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. குறித்து சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  மீண்டும் ஆரம்பித்த சீனர்கள்... பச்சையாக பாம்பை தின்றவர் கவலைகிடம்...
Image result for பாமாயில்

அண்மையில் தான் மலேஷியாவிலிருந்து பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது. இந்நிலையில் இம்ரான் கானின் இந்த மலேஷிய பயணம் கவனம் பெறுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆர்த்தோ டாக்டரின் தற்கொலையும்….அதற்கான காரணமும்….

naveen santhakumar

இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!

naveen santhakumar

தேசிய கைத்தறி நாள்…

News Editor