சினிமா

பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் ராவின் தந்தை மரணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாடகர், நடிகர் என் பன்முகத்தன்மைக் கொண்ட முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.  பிக் பாஸ் 3 ஆரம்பத்தில், அமைதியாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், மீராவை எதிர்த்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

தைரியமாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டி புகழ்ந்துள்ளார். அவரது பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் நேற்று மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது தந்தை இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ  பிக்பாஸ்-4 நிகழ்ச்சி ஆரம்பமா??????

அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மலேசியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முகேன் ராவின் தந்தை பிரகாஷ் ராவிற்கு 52 வயதாகிறது. நேற்று மாலை 6.20 மணியளிவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து பிக்பாஸ் பிரபலங்கள், திரைத்துறையினர் அனைவரும் தங்களுடைய இன்ஸ்ட்ராகிராம், ட்விட்டர் பக்கங்களில் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“மாஸ்டர்”-ஐ பீட் செய்த “பீஸ்ட்” :

Shobika

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய்!… 

naveen santhakumar

அதிக பொருட்ச்செலவில் தயாராகும் வைபவ் திரைப்படம் !

News Editor