சினிமா

ராஜமௌலி படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் இணைந்துள்ளார்.

பாகுபலி-2 படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி இயக்கும் அடுத்தபடம் ‘ஆர் ஆர் ஆர்’. இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் தியாகி அல்லூரி சீதாராம ராஜூவாக ராம் சரணும், தியாகி கொமரம் பீமாக ஜூனியர் என்டிஆரும் நடிக்கின்றனர். இவர்களை தவிர அலியாபட் , சமுத்திரகனி , ஒலிவியா மொரிஸ், அலிசன் டோடி உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

ALSO READ  திரையரங்கில் 100 % பார்வையாளர்கள் அனுமதி ஆபத்தானது : அரவிந்த் சாமி கருத்து..!

அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தில் இணைந்துள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி , மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்….

naveen santhakumar

பிரபல பாடகரை சுட்டுக் கொன்ற கொள்ளை கும்பல்…

Admin

செம்பருத்தி பார்வதி – பாக்கியலட்சுமி செழியன் திருமணம்

naveen santhakumar