சினிமா

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்தானம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சந்தானம் முதன் முதலில் தமிழசினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைப்பின்னர் தன்னுடைய திறமையின் மூலம் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தனம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஏ1’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக ‘பாரிஸ் ஜெயராஜ்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனையடுத்து சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’ படங்களில் பிஸியா நடித்து வரும்  நிலையில், இன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘சபாபதி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நடிகர் விவேக்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய் !

#santhanam #sabhaapathy #tamilcinema #tamilthisai #HBD #actorsanthanam #tamilmovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘fat-free’ பிளாஸ்டிக் சர்ஜரி விபரீதம் .. நடிகை திடீர் மரணம்!

Shanthi

சிறந்த நடிகைக்கான விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!

News Editor

விஜய் சேதுபதி படத்திலிருந்து  விலகினார் அமீர்கான்..!

News Editor