சினிமா

இப்படி செய்யும் இயக்குனர்கள் முன்னேறவே முடியாது: பிரபல இயக்குனர் பேச்சு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் போட்டி போட்டுக் கொண்டு நாளுக்கு நாள் வெளியே வந்தாலும், அவற்றோடு சர்ச்சைகளும் சேர்ந்து வருகிறது.படம் வெளியாகவிருக்கும் கடைசி நேரத்தில் திடீரென ஒருவர் வந்து எனது கதை என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுப்பதால் திரையுலகில் பரபரப்பு ஏற்படுகிறது.பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு தான் அதிகம் எழுகிறது.

ALSO READ  'தளபதி 65' படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்ட கே. பாக்யராஜ் கதை திருட்டு விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். கதை திருட்டு சம்பந்தமாக எழுத்தாளர் சங்கத்திற்கு புகார் வந்தால்,சம்பந்தப்பட்டவரை கொச்சை படுத்த கூடாது என்று அதுவும், இதுவும் ஒத்துப் போகிறது என்றுதான் சொன்னேன். ஆனால் கதை திருட்டு செய்தவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். இந்த மாதிரி இயக்குனர்கள் ஒருநாளும் தேறமாட்டார்கள்.

மேலும் படத்தின் கதையைத் தழுவி என்ன வேணாலும் பண்ணலாம். ஆனால் அந்தக் கதையில் இருந்து கொஞ்சம் , இந்த கதையிலிருந்து கொஞ்சம் எடுத்து ஒரு முழு படமாக மாற்றினால் என்றைக்குமே தேறவே‌ வாய்ப்பில்லை. அதேபோல் திரைத்துறையிலும் நீண்ட நாள் இருக்கவும் முடியாது என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்குருவுடன் சமந்தா ஆன்மிக சந்திப்பு !

News Editor

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Admin

ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது “ஜகமே தந்திரம்” படத்தின் டீசர் !

News Editor