சினிமா

நடிகர் “ரஜினி” மருத்துவமனையில் அனுமதி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஜினி இன்று காலை உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி  இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று (25/12/2020) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவருடன் படப்பிடிப்பில் இருந்த சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 22- ஆம் தேதி ரஜினிகாந்திற்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். 

இந்த நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு ரத்த ஓட்டம், இதய துடிப்பு சீராக இருக்கிறது. ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் ரஜினிகாந்த் இருப்பார். மேலும், அவருக்கு கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ரஜினியின் ரத்த அழுத்தம் சீரானவுடன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சோனு சூட் !    

#rajinikanth #rajini #superstar #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காவல் துறையினருக்கு உதவிய நடிகர் யோகி பாபு !! குவியும் வாழ்த்துக்கள்…..

naveen santhakumar

காற்றில் மறைந்த கனீர் குரல்… யார் இந்த மாணிக்க விநாயகம்?

naveen santhakumar

வெளியானது ஹாஸ்டல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! 

News Editor