இந்தியா

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் முதன் முறையாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த புற்றுநோயால் 75 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து, ‘செர்வாவேக்’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் இந்த நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும், 200 ரூபாய் முதல் 400 ரூபாய் மதிப்பில் சீரம் நிறுவனம் தடுப்பூசியை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகளில் 3 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  இனி முக கவசம் தேவையில்லை - இஸ்ரேல் அறிவிப்பு…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கதறவைக்கும் தக்காளி விலை! பொதுமக்கள் கண்ணீர்..

Shanthi

வாரணாசியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

naveen santhakumar

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

Shanthi