இந்தியா

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் எனவும், பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் எனவும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ‘ஹோலோகிராம்’ இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும். அடையாள அட்டை முன்புறம், வாக்காளரின் புகைப்படமும், அவரது ‘நெகட்டிவ் இமேஜ்’ போன்ற படமும் இடம்பெறும். மேலும் புதிய வாக்காளர் அட்டையில் கியூ ஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெற்று போலியான அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.


Share
ALSO READ  இந்திய மகளிர் ஹாக்கி அணிஅனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர்- குடியரசு தலைவர்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராகுல் காந்தியின் வெள்ளை அறிக்கை :

Shobika

10,000 படுக்கைகள்; சீனாவை விட பத்து மடங்கு பெரிய மருத்துவ வளாகத்தை அமைத்த இந்தியா… 

naveen santhakumar

புதிய சாதனையை படைத்த மாருதி சுஸுகி

Admin