இந்தியா

கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதா…?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2-வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். அவை முதலில் இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின.

Indian Council of Medical Research - Wikipedia

இந்நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2-வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் ‘டெல்டா பிளஸ்’ என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது.மராட்டியம், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொற்றியல் தலைவரான மருத்துவர் சமீரன் பண்டா கூறும்போது, நாட்டில் கொரோனா 2வது அலை போன்று 3-வது அலை மிக கடுமையாக இருக்காது.

ALSO READ  Desert Diamond Casinos Home
No Evidence Delta Plus Variant Will Lead to Major 3rd Wave of Covid: India  Top Genome Sequencer

கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முறையான கொரோனா அணுகுமுறைகள் ஆகியவை இந்த அலைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். டெல்டா பிளஸ் கொரோனா வகை மீது தடுப்பூசியின் விளைவு பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.இதுவரை 10 மாநிலங்களில் 49 ‘டெல்டா பிளஸ்’ கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இது, 3-வது அலை தொடங்கி விட்டதற்கு அடையாளம் இல்லை. இதனை 3வ-து அலை என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும் என அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin-up 634 официального Сайт Играть в Казино Пинап К

Shobika

அதிகம் சாப்பிடுவதாக கூறி…… 2 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது:

naveen santhakumar

Bois Locker Room குரூப்பிற்கு Master Mind-ஆக செயல்பட்ட மாணவி- போலீசாருக்கு அதிர்ச்சி …

naveen santhakumar