இந்தியா

ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்த மத்திய அரசு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள் உள்ளன என மத்திய உள்விவகார துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்விவகார துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதிலளித்து பேசும்போது, நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள் உள்ளன எனவும் இந்த காலி பணியிடங்களானது பணி ஓய்வு, ராஜினாமா, மரணம், வேலையில் இருந்து நீக்கம் உள்ளிட்ட காரணிகளால் ஏற்படுகின்றன எனவும் கூறினார்.

மேலும் நடப்பு 2022ஆம் முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 4,984 ஆக உள்ளதாகவும் இவற்றில் 4,120 பேர் அதிகாரிகளாக பணியில் உள்ளனர் எனவும் ஐ.ஏ.எஸ். பதவிகளில் 1,472 காலி பணியிடங்களும், ஐ.எப்.எஸ். பதவிகளில் 1,057 காலி பணியிடங்களும் உள்ளன எனவும் கூறினார்.


Share
ALSO READ  எல்.முருகனுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

Shanthi

டெல்லி – ஆசிட் வீச்சு சம்பவம்..

Shanthi

கைக்குழந்தையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……

naveen santhakumar