இந்தியா

IAS, IPS மற்றும் IFS தவிர இவ்வளவு பதவிகள் இருக்கா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நமது நாட்டின் மிக உயரிய அதிகாரமிக்க அரசியல்வாதிகளுக்கே ஆலோசனை வழங்கக்கூடிய பதவிகள் என்று நம் அனைவருக்கும் பொதுவாக தெரிந்தவை IAS, IPS.

நம்மில் பெரும்பாலானோர் ‘சூரியவம்சம்’ படம் பார்த்திருப்போம். அதில் தேவயானி தான் கலெக்டருக்கு படிப்பதாக கூறுவார். ஓரே பாடலில் கலெக்டரும் ஆவார் அது தனிக்கதை. ஏன் கூறுகிறோம் என்றால், இன்னும் நம்மில் பெரும்பாலானோர் கலெக்டருக்கு படிப்பது என்பது ஏதோ தனி டிகிரி படிப்பு என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது அப்படி இல்லை. நமது நாட்டில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) என்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பால் ஆண்டுதோறும் அனைத்து இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

UPSC அலுவலகம்.
ஸ்ருஷ்டி தேஷ்முக் IAS.

இந்த தேர்வு மூலம் மட்டுமே நாட்டின் மிக உயரிய பதவிகள் ஆன இந்திய ஆட்சிப் பணி (IAS) அதாவது கலெக்டர், இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFoS), இந்திய வெளியுறவு பணி (IFS) ஆகியவற்றிற்கு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதில் IFoS க்கு மட்டும் தனியாக தேர்வு நடக்கும்.

ALSO READ  கொரோனா எதிரொலி; சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு !

‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர் முஸௌரியிலுள்ள ‘லால் பகதூர் சாஸ்திரி அகடமியில்’ பயிற்சிக்கு செல்வார்கள்.

இந்த தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகிய இரண்டு பணிகளை தேர்ந்தெடுத்தவர்கள் தான் அங்கு செல்வார்கள். இதில் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகிய அதிகாரிகளுக்கு பொதுவான பயிற்சிகள் முடிந்த பின்னர் ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டும் ஹைதராபாத்தில் உள்ள ‘சர்தார் பட்டேல் அகாடமி’-ல் தங்களுக்கென்று பிரத்தியேகமான போலீஸ் பயிற்சியை துவங்குவார்கள்.

LBSNAA
SVPNPA

இந்திய வெளியுறவு பணிக்கு பயிற்சிக்கு செல்பவர்கள் டெல்லியில் அமைந்துள்ள ஃபாரின் சர்வீஸ் இன்ஸ்டிடியூட் செல்வார்கள்.

Foreign Service Institute.

வனப் பணியை தேர்வு செய்தவர்கள் ‘டேராடூன்’ல் உள்ள Indira Gandhi National Forest Academyக்கு பயிற்சிக்கு செல்வார்கள். ஆனால் இதை தவிர்த்து இன்னும் நிறைய குடிமைப்பணிகள் உள்ளன.

IGNFA

1) INDIAN REVENUE SERVICE(CUSTOMS & GENERAL).

ALSO READ  1xBet Azərbaycan: rəsmi saytın nəzərdən keçirilməs

2) INDIAN POST& TELECOMMUNICATION FINANCE AND ACCOUNTS SERVICE.

3) INDIAN AUDIT AND ACCOUNTS SERVICE.

4) INDIAN REVENUE SERVICE (IT).

5) INDIAN DEFENCE ACCOUNTS SERVICE.

6) INDIAN ORDNANCE FACTORIES SERVICE.

7) INDIAN POSTAL SERVICE.

8) INDIAN CIVIL ACCOUNTS SERVICE.

9) INDIAN RAILWAYS ACCOUNTS SERVICE.

10) INDIAN RAILWAYS PERSONNEL SERVICE.

11) INDIAN RAILWAYS TRAFFIC SERVICE.

12) INDIAN DEFENCE ESTATES SERVICE.

13) INDIAN INFORMATION SERVICE.

14) INDIAN TRADE SERVICE.

15) INDIAN CORPORATE LAW SERVICE.

16) ARMED FORCES HEADQUARTERS.

17) DELHI,ANDAMAN NICOBAR,DADRA NAGAER HAVELI,LAKSHWADEEP CIVIL SERVICE.

18) PONDICHERRY CIVIL SERVICE.

என மொத்தமாக 22 வகை குடிமைப் பணிகள் நம் நாட்டில் உள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் முன்னிலை வகிக்கும் இ-சஞ்சீவினி தளம் :

naveen santhakumar

Mostbet Azerbaycan rəsmi casino Giriş və qeydiyyat Mostbet A

Shobika

3வது அலையா??- உ.பி.ல் மர்ம காய்ச்சல் 40க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு…!

naveen santhakumar