இந்தியா

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக நீதிபதி சந்திரசூட் நியமனம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பெயரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளதையடுத்து இதுகுறித்த அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக தற்போதுள்ள தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  ஊடக செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி ரமணா வருத்தம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet India: Official Site, Registration, Bonus 25000 Logi

Shobika

குறையாத கொரோனா; முழு ஊரடங்கை  அமல்படுத்தியது  தெலுங்கானா அரசு !

News Editor

மொழி கற்றல் செயலியையே Tinder App ஆக பயன்படுத்தி இளைஞர் திருமணம்….

naveen santhakumar