இந்தியா

ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் கூறியுள்ளார்.

ALSO READ  பிரசவத்திற்கு முதல்நாளில் கொரோனாவை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த பெண்மணி.....


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்:-

சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். மேலும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

ALSO READ  மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி - பிரதமர் நரேந்திர மோடி உறு‌தி..!!

அமைச்சர் சவான் இந்த சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார். 

மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை அமைக்கும் பணி கடந்த ஞாயிறு காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகில் தலை சிறந்த விஞ்ஞானிகளில் 100 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தகவல்

News Editor

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா ???

News Editor