இந்தியா

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போலந்து மாணவர்- நாட்டை விட்டு வெளியேற உத்தரவு……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

போலந்து நாட்டை சேர்ந்த கமில் சியட்சைன்ஸ்கி (Kamil Siedcynski) என்ற மாணவர் மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி கொல்கத்தாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்டார்.

இந்த விஷயம் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தின் (Foreigner Regional Registration Office (FRRO)) கவனத்திற்கு வந்தது. இதை அடுத்து சம்மந்தபட்ட மாணவர் கமிலை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை நாட்டை விட்டு 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.

முன்னதாக விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்ட படங்களை பகிர்ந்திருந்த அஃப்ஸரா அனிகா மீம் (Afsara Anika Meem) என்ற வங்காளதேச மாணவி ஒருவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தது.

ALSO READ  191 பயணிகளுடன் கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்த விமானம்… 

இதேபோல் முன்னர் சென்னை ஐ.ஐ.டி-ல் ஜாகோப் லின்டில்தால் (Jakob Lindenthal) என்ற ஜெர்மனை சேர்ந்த மாணவரும் போராட்டல் ஈடுபட்டு நாட்டுவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறுத்தையை சிதறவிட்ட பெண்மணி – பரபரப்பு வீடியோ …!

News Editor

செருப்பால் தாக்கப்பட்ட கர்ப்பிணி… குழந்தை இறந்த பரிதாபம்…

naveen santhakumar

ரஷியாவில் நடக்கும் விண்வெளி பயிற்சிக்கு அரியலூர் மாணவிகள் தேர்வு

News Editor