இந்தியா

மீண்டும் திறக்கப்படுகிறது ஜனாதிபதி மாளிகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

ஜனாதிபதி மாளிகையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் பொதுமக்கள் பார்வைக்காக ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக விளங்கி வருகிறது. மொத்தம் 340 அறைகளைக் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் பொதுமக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை மீண்டும் திறப்பு:  அருங்காட்சியகமும் திறப்பு..! - Dinakaran

ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் 14 முதல் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. டெல்லியில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்காக வரும் ஆகஸ்ட் 1 முதல் ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகமும் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ALSO READ  ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தலைமறைவு?… தட்டித்தூக்க விரைகிறது தனிப்படை!
ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியகம்: ஜனவரி 5-முதல் மீண்டும் திறப்பு! -  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

காலை 10.30 முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட மூன்று நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 25 பேர் என சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜனாதிபதி மாளிகை சுற்றுலா அனுமதிக்கப்படும். செவ்வாய் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஆறு நாட்களில், காலை 9.30 முதல் 11 மணி வரை, காலை 11.30 முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 முதல் 3 மணி வரை மற்றும் பிற்பகல் 3.30 முதல் மாலை 5 மணி வரையிலான முன்பே பதிவு செய்யப்பட்ட நான்கு நேரப் பிரிவுகளில் ஒரு பிரிவுக்கு 50 பேருக்கு ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகம் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐம்பதாயிரம் ரூபாய் நிதி திரட்டி போலிஸாருக்கு அளித்த 3 வயது சிறுவன் எவ்வாறு சாதித்தான் இதை ??..

naveen santhakumar

ரபேல் போர் விமான ஒப்பந்தம் : 650 கோடி லஞ்சம் இடைத்தரகர் சுஷன் குப்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் புலனாய்வு நிறுவனம் மீடியாபார்ட் செய்தி வெளியீடு

News Editor

செமஸ்டர் தேர்வு முறை- சி.பி.எஸ்.இ திட்டம் !

naveen santhakumar