இந்தியா

மீண்டும் லட்டு விற்பனையை தொடங்கியது திருப்பதி தேவஸ்தானம்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி:-

55 நாட்களுக்கு பிறகு லட்டு பிரசாதம் விற்பனையை திருப்பதி தேவஸ்தானம் நேற்று துவங்கியது.

கொரோனா பரவல் காரணமாக திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆனாலும் தினசரி நடக்கும் கைங்கரியங்களை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த கைங்கரியங்களின் போது, ஏழுமலையானுக்கு  கல்யாணோற்சவம் லட்டு (பெரிய லட்டு), வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டு வந்தது. 

இந்த பிரசாதங்களை, திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு படை ஊழியர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பெற்று வந்தனர். இதனால், பிரசாதங்கள் தேக்கமடைய துவங்கின. இதையடுத்து, திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நேற்று முதல், இந்த பிரசாதங்கள் விற்பனை துவங்கியது.

ALSO READ  திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறு பேச்சு: நடிகர் சிவக்குமார் மீது வழக்கு பதிவு.. 

இதன்படி, ஒரு பெரிய லட்டு, 200 ரூபாய், ஒரு வடை, 100 ரூபாய், 500 பெரிய லட்டுகளும், 500 வடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இரண்டு மணி நேரத்தில் முழுதும் விற்று தீர்ந்தன. தினமும் இந்த லட்டு, வடை பிரசாதம் விற்பனை நடக்கும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ALSO READ  களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

ஒரு காலத்தில் திருப்பதி தேவஸ்தானம்  ஸ்ரீவாரி நிவேத்தியதாதிற்காக 51 பெரிய லட்டுகளை  தயாரித்து படைத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரூ.3,500 ரூபாயில் தொடங்கி…..மாதம் ரூ.1.25 லட்சம் சம்பாதிக்கும் பெண்:

naveen santhakumar

இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!

naveen santhakumar

நிலம் வாங்கி ஏமாந்த நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன், அஞ்சலி டெண்டுல்கர்… 

naveen santhakumar