இந்தியா

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்- மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடா குழுமம் வாங்கியிருப்பதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Air India Sale LIVE Updates: Reserve Price For Air India Was Fixed At Rs  12,906 Crore By Govt Of India

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாக நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்பட்டது. இதனால் நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் ஆயிரக்கணக்கான கோடி இழப்பில் இயங்கும் நிறுவனத்தை வாங்குவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் தயக்கம் காட்டின.

எனினும், டாடா உள்ளிட்ட ஒன்றிரண்டு நிறுவனங்கள் வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் டாடா நிறுவனம் ஏலத்தில் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அந்த செய்தியை உறுதி செய்யவில்லை.

ALSO READ  மோடிக்காக தயாராகும் பிரம்மாண்ட சொகுசு விமானம்.

இந்த நிலையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியிருப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் டேலஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ghar-wapasi of air india an emotional moment for ratan tata as tata sons  wins bid : झोली में एयर इंडिया! पिता की यह तस्वीर देख आज भावुक तो बहुत  होंगे रतन टाटा -

இதனிடைய ஏர் இந்தியாவே மீண்டும் வருக! என்றும் ஜெ.ஆர்.டி. டாடாவின் தலைமையின் கீழ் ஏர் இந்தியா பெற்றிருந்த மரியாதையையும் கௌரவத்தையும் மீண்டும் பெறச்செய்வோம் என ரத்தன் டாடா கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓணம் பண்டிகை 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசு – கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

News Editor

1xBet Azərbaycan: rəsmi saytın nəzərdən keçirilməs

Shobika

Azərbaycandakı bukmek

Shobika