இந்தியா தொழில்நுட்பம்

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு IOS மற்றும் ஐபேட் OS போன்ற அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் போன்களில் வழங்கப்படும் சிரி வாய்ஸ் இந்தியாவுக்கான புதிய அப்டேட்டில் வெளியாகிறது.

இந்த ஸ்பீக்கர் முன்னதாக 2017 ஆம் ஆண்டு apple internation web developers conference -ல் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 2018-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இதற்கான விற்பனை தொடங்கியது.

இதன் விலை முன்னதாக இந்திய மதிப்பில் ரூ. 24,860 என நிர்ணயம் செய்யப்பட்டு பின் ரூ. 21,300 விலை குறைக்கப்பட்டது.

ALSO READ  மணிஷ் சிசோடியா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது..

புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் 7 இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை குரல் வழியே இயக்க முடியும். இதை கொண்டு இசை, செய்திகள் மற்றும் வீட்டில் உள்ள கனெக்ட்டெட் சாதனங்களை இயக்க முடியும்.

ஸ்பீக்கரில் உள்ள சென்சார்கள் வீட்டில் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப ஆடியோ அளவுகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

இதில் மொத்தம் ஆறு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இது நாம் விருப்பதிற்கேற்ப கேட்கும் பாடல்களை அதிவேகமாக வழங்குகிறது.

ALSO READ  திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து உடலுறவு கொள்வது பலாத்கார குற்றமாக கருத முடியாது-உயர்நீதிமன்றம் அதிரடி…

ஹோம்பாட் மாடல் ஏ8 சிப் கொண்டிருக்கிறது. இதில் பயனர்களின் உரையாடல்கள் அனைத்தும் சாதனத்திலேயே சேமிக்கப்பட்டு, அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன.

இதில் ஆப்பிள் உருவாக்கிய ஊஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது ஆடியோ தரத்தை மேம்படுத்தி தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒப்பிடும் போது ஆப்பிள் ஹோம்பாட் விலை இந்தியாவில் மட்டும் மிகக் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

UPSC தேர்வில் ராகுல்-மோடி வெற்றி.. 

naveen santhakumar

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்….

naveen santhakumar

26/11 மும்பை தாக்குதல் நினைவு தினம்- தியாகிகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

naveen santhakumar