அரசியல்

நாடு முழுவதும் 2030ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் மின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த இலக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். வளாகத்தில், அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு தீர்வுக்கான புதுமை தொழில்நுட்ப மைய கட்டிடத்திற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அடிக்கல் நாட்டினார். 100 கோடி மதிப்பீட்டில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. அடுத்ததாக லித்தியம் அயன் பேட்டரி மூலமாக செயல்படும் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்து அதனை ஓட்டினார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த செய்தி இன்று நாடு முழுவதும் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே ஒரு பெரிய சவலாக தான் உள்ளது. Green house effect – இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவின் பிரச்சினைக்காக மட்டும் பேசவில்லை உலகளாவிய பிரச்சினையாக தான் பேசினார். Mission inovation(புதிய இந்தியாவை உருவாக்கும் திட்டம்) மூலம் பசுமை ஆற்றல் மூலங்களுக்கு ( clean energy ) முக்கியத்துவம் அளிக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

அதன் அடிப்படையில் 2022ம் ஆண்டிற்குள் 175 ஜிகா வாட் திறன் கொண்ட பசுமை ஆற்றல் மூலங்களை இந்தியாவில் உற்பத்தி செய்திட பிரதமர் மோடி தலைமையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது, ஆனால் முன்னதாக 2018ஆம் ஆண்டிலேயே அந்த இலக்கை நாம் அடைந்து விட்டோம்.எனவே 2022ம் ஆண்டிற்குள் 400 ஜிகா வாட் பசுமை ஆற்றல் மூலங்களை (clean energy) உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 2030ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகிதம் மின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Share
ALSO READ  விரைவில் முற்றுப்புள்ளி...பொங்கல் திருநாளில் உறுதியேற்ற ஸ்டாலின்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மார்பிங் செய்து மாட்டிக்கொண்ட திமுக-வின் ஆ.ராசா… 

naveen santhakumar

எனக்கு 10 கோடி விலை பேசினார்கள்; சினேகன் பேட்டி !

News Editor

4-வது முறையாக பீகாரில் ஆட்சியை அமைத்து நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றார் :

naveen santhakumar