தமிழகம்

ஓவியத்தில் கின்னஸ் சாதனை: கோவை மாணவி அசத்தல்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை:-

13 மணிநேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்து கல்லூரி மாணவி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் உலியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா ரவி (வயது 21). கோவையில் உள்ள சங்கரா கல்லூரியில் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார்.

மோனிஷாவுக்கு சிறு வயது முதலே ஓவியத்தில் அதீத ஆர்வம். தந்தை மற்றும் தாய் அளித்த ஊக்கம் காரணமாக பல்வேறு ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிகளும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து, பல்வேறு உலகத் தலைவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் படங்களையும் வரைந்தார். இதனால் இவருடைய ஓவியத்திற்கு அங்கீகாரம் கிடைக்க தொடங்கியது.

ALSO READ  கோவையை மிரட்டும் கொரோனா !

பள்ளியில் படிக்கும்போதே மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளை வென்ற மோனிஷா, இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு சாதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற உலக சாதனை போட்டியில் பங்கேற்ற மோனிஷா 6,057.92 சதுர அடி நீளமுள்ள பேப்பரில் தொடர்ந்து 13 மணி நேரம் ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.

ALSO READ  நிவர் புயல்…..பாதிப்பு எப்படி?????

இதற்கு முன்னர் 12 மணி நேரம் தொடர்ந்து ஓவியம் வரைந்தது சாதனையாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோனிஷாவின் இந்த சாதனையைப் பெற்றோர்கள், நண்பர்கள், பேராசிரியர்கள், உறவினர்கள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய தேனி நீதிமன்றம்..! 

News Editor

தென் மாவட்டங்களில் மீண்டும் தலைதூக்கும் பெண் சிசு படுகொலை..

naveen santhakumar

உணவுத்துறை அமைச்சர் காமராஜிற்கு கொரோனா :

naveen santhakumar