தமிழகம்

வேலை வாய்ப்பு… உடனே நாளைக்கு மிஸ் பண்ணாம போங்க!

Job offer
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை அன்று ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

முகாமில் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு 200-க்கும் அதிகமான வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

எனவே, ஐந்தாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ கணினி தகுதி, ஓட்டுநர் தகுதி உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை உடைய மனுதாரர்கள் கலந்துகொண்டு தனியார்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.

ALSO READ  மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ். பாஸ்கரன் நியமனம்..!

மேலும், இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவு இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் நடைபெறும்.

அயல்நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளும், சுயவேலைவாய்ப்பு கடனுதவி திட்டங்கள் குறித்தும், கடனுதவி வசதிகள் குறித்தும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

ALSO READ  ராஜலட்சுமி தனது கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்...கிராமிய பாடகி அதிரடி...

எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் பங்கு கொண்டு, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம். மேலும், வேலைநாடுநர்கள் அனைவரும் தவறாது முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் அறிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வு: மேட்டூர் அருகே மாணவன் தற்கொலை

News Editor

2-வது டோஸ் போடாதவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

News Editor

எனக்கும், என் கணவருக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்; முதல்வருக்கு நளினி கடிதம் ! 

News Editor