தமிழகம்

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகள் அதிகரிப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2 கோடியே 47 லட்சத்து 98 ஆயிரத்து 227 பயணிகள் பயணித்துள்ளனர். ஜூலை மாதம் 53 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில் ஆகஸ்டு மாதம் 56.6 லட்சமாக உயர்ந்தது. கடந்த மாதம் மட்டும் 61 லட்சத்து 12 ஆயிரத்து 906 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் அதிகமாகும். மேலும் 4.46 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அதிகபட்சமாக நேற்று மட்டும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 404 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - தொடங்கிய ரயில் டிக்கெட் முன்பதிவு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் IAS நியமனம்…

naveen santhakumar

தீபாவளிப் பண்டிகைக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப் படுகிறதா?????

naveen santhakumar

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் கடன் வசூலிக்க தடை- முதல்வர் பழனிசாமி….

naveen santhakumar