தமிழகம்

கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நலவாரியம் – தமிழக அரசு அரசாணை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆதரவற்ற மகளிர் மற்றும் கைம்பெண்கள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு நல வாரியம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்படும்” என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  இவர்களுக்கு ரூ.2000 பொங்கல் போனஸ்… தமிழ்நாடு அரசு அசத்தல்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறந்து கிடந்த முதியவர்; பிளீச்சிங் பவுடர் தெளித்த மாநகராட்சி ஊழியர் !

News Editor

தளர்வுடன் கூடிய ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு… !

naveen santhakumar

தி மு க முன்னாள் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 வது நினைவு தினம்

News Editor