தமிழகம்

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பும் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Missing from India's citizenship law: 100,000 Sri Lankan refugees | Refugees  News | Al Jazeera

இலங்கைத் தமிழர் குடும்பங்களை சேர்ந்த பொறியியல் படிக்க தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசே ஏற்கும். முதுநிலை படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

ALSO READ  3 மாத வாடகை ரூ.4.20 லட்சம் வேண்டாம்:வணிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மனிதநேய மருத்துவர்..

இலங்கைத் தமிழர் குடும்பங்களை சேர்ந்த பாலிடெக்னிக் படிக்க உள்ள மாணவர்களுக்கு ரூ2,500லிருந்து ரூ10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ரூ3000ல் இருந்து ரூ12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ5000ல் இருந்து ரூ20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதோடு இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ALSO READ  தூக்கு போடுவது குறித்து விளக்கமளித்த புதுமாப்பிள்ளை பலி
Treat Rohingyas as in case of Sri Lankan Tamil refugees | ORF

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.

A document by Tamil refugees suggests repatriation as the only | India News  – India TV

இந்நிலையில் இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மின்வாரியத்திலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை…!!

Admin

இந்திய பிரதமருக்கு தேர்தலை நடத்தும் நித்தியானந்தா…..

naveen santhakumar

5, 8-ம் வகுப்புகளுக்கானபொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு

Admin