தமிழகம்

மின்வாரியத்திலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இருக்கும் பணியாளர்களை வைத்துதான் மின்சார வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் 9 – ஆவது மாநில மாநாடு அதன் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது . பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் . நிர்வாகி கோவிந்தராஜ் வரவேற்றார் . மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில் , மின் வாரியத்தை ஒரு குடையின் கீழ் செயல்படும்படி மாற்றியமைக்க வேண்டும் .

தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் மின்வாரிய காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் . 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் காலி என அரசு அறிவித்துள்ளது . அங்கு 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் . இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர் .

ALSO READ  10 நாட்களில் தடையில்லா மின்சாரம் - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…!

மாநாட்டில் , மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள மக்கள் விரோத திட்டங்களைக் கைவிட வேண்டும் , மின்வாரித்தை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும் , ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

சி.திவ்யதர்ஷினி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கால்டாக்ஸி விவகாரம்; ஓட்டுநரை கத்தியால் குத்திய இந்து முன்னணியினர் !

News Editor

காரில் 8 ஃபுல் பாட்டில், 2 கேஸ் பீருடன் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்.. 

naveen santhakumar

தமிழகத்தில் ஏழு இடங்களில் நடக்கும் அகழாய்வு பணிகள்…இந்த மாதத்துடன் நிறைவு பெறுகின்றது!!

Admin