தமிழகம்

தமிழ் திரையுலகினருக்கு பா.ஜ.க-ல் முக்கிய பதவிகள்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த தமிழ் திரையுலகினருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

பாரதி ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது:-

தமிழ்நாடு பா.ஜ.க. கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணை தலைவராக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நியமிக்கப்பட்டள்ளார். 

ALSO READ  த.மா.கவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதா ரவி, நடிகர் விஜய்குமார், இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகைகள் நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் கொரோனா கணக்கு புகழ் மதுவந்தி ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

ALSO READ  144 தடை உத்தரவு பிறப்பிப்பு - 50க்கும் மேற்பட்டோர் கைது

ஒரே நேரத்தில் ஒரு கட்சியில் இத்தனை சினிமா பிரபலங்கள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. தமிழ்நாடு பி.ஜே.பி-ல் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இது போன்றவர்களுக்கு அதிக பதவிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாப பலி- டிக்-டாக்கால் விபரீதம்..?

naveen santhakumar

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சிறப்பு அறிவிப்பு!

naveen santhakumar

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை-முதல்வர்:

naveen santhakumar