தமிழகம்

தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாட காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவுரை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

தமிழகத்தில் பொதுமக்கள் தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என தமிழகக் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தவறாமல் இதை செய்யுங்க.. இல்லன்னா ஆக்ஷன் கடுமையா இருக்கும்.. காக்கிகளை  அலறவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு. | Do this without fail .. otherwise the  action will be tough ...

‘தமிழகக் காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு . தீபாவளியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் என தமிழகக் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு கீழ்க்காணும் அறிவுரைகளைக் கடைப்பிடிக்கும்படி அறிக்கையில் கூறியுள்ளார்.

Safety Archives - Times of AthibAn

1.கொரானா வழிகாட்டுதல்களைப் பின்பற்றிதான் கடை வீதிகள், மார்க்கெட் பகுதிக்குச் செல்ல வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

  1. மருத்துவமனை மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  2. உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசுகள் வெடித்தல் வேண்டும். தடை செய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் வாங்கவும் கூடாது, வெடிக்கவும் கூடாது. .
  3. விபத்துகளைத் தவிர்க்க பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்,
ALSO READ  ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- செங்கோட்டையன்...
How to celebrate Diwali in India
  1. காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும்.
  2. எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அவசர உதவி எண் 101 மற்றும் அவசரக் காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112 –ல் அழைக்க வேண்டும்.
  3. வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல் ரோந்து உங்கள் வீட்டிற்கு வருவதை உறுதிப்படுத்த முடியும்.
  4. கார் / வேன் மூலம் நடு இரவில் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்கள், அவ்வப்போது ஓய்வு எடுத்துப் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சாலை விபத்துகளைத் தடுக்கலாம்.
  5. ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் இரவு முழுவதும் விழிப்புடன் இருந்து தங்கள் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  6. சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்குத் தகவல் தர வேண்டும்.
ALSO READ  வருமான வரித்துறைக்கு நன்றி சொன்ன அஜித்.. இணையத்தில் வைரலாகும் அறிக்கை.
Delhi To Celebrate Diwali With Only Green Crackers At 800 Open Spaces; ₹1  Lakh Fine For Violation

மேற்கண்ட விதிமுறைகளை கடை பிடித்து பொதுமக்கள் தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாடவேண்டும் என தமிழகக் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆவினில் அறிமுகப்படுத்தப்பட்ட 10 புதிய பொருட்கள்!

Shanthi

அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு… மாணவர்கள் அதிர்ச்சி!

naveen santhakumar

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அணைத்து கட்சிகளும் ஆதரவு !

News Editor