தமிழகம்

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தடை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்காது என்றும், மேலும் பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒருபுறம் கொரோனா, மறுபுறம் ஒமைக்ரான் என இருவேறு தொற்றுக்கள் கிடுகிடுவென பரவி வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது, தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்காது என்றும், அதேபோல கடைகளுக்கான நேரக் கட்டுப்பாட்டு அதிகரிக்கப்படும். அநேகமாக இது நாளை முதல் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
ALSO READ  கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி மரணம்

naveen santhakumar

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்கள் தொடக்கம்…! 

naveen santhakumar

தயவு செய்து இதை கட்டாயம் செய்யுங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு!

naveen santhakumar