தமிழகம்

16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை….செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு….முதல்வர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

நிவர் புயல் பாதிப்பால் வேகமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். ஏரியை திறக்கும்போது கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதையடுத்து 16 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறையும் அறிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஏரியில் இன்று விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனை முதல்வர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். கரையோர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ALSO READ  புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்படுகிறார் தமிழக முதல்வர்:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘நிவர் புயல் காரணமாக நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. இதற்கான அரசாணை சிறிது நேரத்தில் வெளியிடப்படும்,’ என தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்த்து, விடுமுறை விடப்படும் மாவட்டங்களின் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் இல்லை……..

naveen santhakumar

வயது வித்தியாசம் பார்க்காமல் பல பெண்களின் கற்பை சூறையாடிய மேடைப் பாடகர் !

News Editor

கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்.

naveen santhakumar