தமிழகம்

சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமநாதபுரம்:

தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அரிச்சல் முனை செல்லத் தடை நீங்கியது!'- தனுஷ்கோடிக்கு அனுமதிக்கப்படும்  சுற்றுலாப் பயணிகள் | Tourists allowed to Dhanushkodi

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோகத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ராமேஸ்வரத்திற்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் தனுஷ்கோடிக்கு செல்ல வந்தனர்.

ALSO READ  கட்டுப்பாட்டு அறையையும் விட்டு வைக்காத கொரோனா !

இதனால் புதுரோடு அருகே போலீசார் சோதனை சாவடி அமைத்து தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பி வைத்தனர்.

மேலும் நாளை ஆவணி அமாவாசை தினம் என்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!

News Editor

துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

News Editor

10 ரூபாய் கட்டணத்தில் சென்னையை சுற்றி பார்க்க சுற்றுலாத் துறை அறிவிப்பு

Admin