தமிழகம்

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IMD downgrades rain alert for Mumbai, Thane as heavy rainfall belt shifts  southwards - Cities News

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, நாமக்கல் உட்பட தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

ALSO READ  உலக செவிலியர் தினம்; வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை !
IMD red alert: Extremely heavy rain over ghats in Pune, Satara today |  Cities News,The Indian Express

அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் சுணக்கம்- காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

naveen santhakumar

BREAKING பரபரப்பு… தரைமட்டமான குடிசை மாற்று வாரிய கட்டிடம்!

naveen santhakumar

அதிகரிக்கும் கொரோனா; புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor