தொழில்நுட்பம்

ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

ALSO READ  உலக தலைவர்களை குறிவைத்த பிட்காய்ன் மோசடி ஹேக்கர்கள்…
ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்... ஒபாமா இரங்கல் | Steve Jobs passes  away | 'ஆப்பிளின்' தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம்! - Tamil Oneindia

இந்த விண்ணப்ப படிவத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1973-ம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் இருந்த போது பூர்த்தி செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் வாழ்நாளில் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ஆகும். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் விண்ணப்ப படிவம் 3.43 லட்சம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ. 2,54,95,018.50 ஆகும்.

 ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் விண்னப்பத்திற்கான ஏலம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. வகையில் நடைபெற்றது. ப்ரின்ட் வடிவத்திற்கு டாலர்களிலும், என்.எப்.டி.க்கான ஏலம் எத்தெரியம் மூலமாகவும் நடைபெற்றது. என்.எப்.டி.-யை விட விண்ணப்பத்தின் ப்ரின்ட் வடிவத்திற்கு நான்கு மடங்கு அதிக தொகை வழங்கப்பட்டது. ப்ரின்ட் வடிவத்திற்கான அதிகபட்ச தொகை 3.43 லட்சம் டாலர்கள் வரை கேட்கப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பயனர்களின் சுயவிவரங்களை பகிரும் ‘வாட்ஸ் ஆப்’ …! தப்பிப்பது எப்படி..!

News Editor

ரெட்மி நோட் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட் :

Shobika

சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவியின் தொடக்க விலை ரூ.4.99 லட்சம் மட்டுமே..!!!

Shobika