தொழில்நுட்பம்

ஆதார் பாதுகாப்பை மேம்படுத்துவது எப்படி????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஸ்போர்ட்(passport), வாக்காளர் அட்டை(voter card), ஓட்டுநர் உரிமம்(driving license) என முக்கிய அடையாள அட்டைகள் இருந்தாலும் ஆதார் அட்டை(aadhaar card) மிக முக்கியமான ஆவணமாக உருவெடுத்துள்ளது. 

ஆதார் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு(central govt) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் மிக முக்கிய அம்சமாக ஆதாரை லாக்(lock) செய்யவும், அன்லாக்(unlock) செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

​#ஆதாரை லாக் செய்வது என்றால் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை லாக்(lock) செய்துவிட்டு 16 இலக்க டிஜிட்டல் விர்ச்சுவல் ஐடி(digital virtual id) எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆதார் எண்ணை லாக் செய்த பிறகு, யூஐடி, யூஐடி டோக்கன், ஏன்சிஎஸ் டோக்கன், டெமோகிராபிக், ஓடிபி போன்ற எந்தவொரு வசதியையும் பயன்படுத்தமுடியாது.

#​ஆதார் எண்ணை மட்டுமல்லாமல் கைரேகை(ginger print) உள்ளிட்ட பயோமெட்ரிக்(biometric) விவரங்களையும் லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும். மக்களிடையே தங்களின் பயோமெட்ரிக் விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பிக்கையளிக்கும் வகையில் இப்புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

#இதை லாக் செய்த பிறகு கைரேகை, கருவிழி போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பை பயன்படுத்த முடியாது.

ALSO READ  நாட்டிலேயே முதல்முறையாக இரவு நேர ஆதார் சேவை மையம்.....

#​ஆதார் எண்ணை லாக் செய்வதற்கு 16 இலக்க விர்ச்சுவல் ஐடி (விஐடி) தேவைப்படும். உங்களிடம் விஐடி இல்லையெனில் எஸ்.எம்.எஸ் மூலமாகவோ ஆதார் ரெசிடென்ட் இணையதளம் வாயிலாகவோ பெற்றுக்கொள்ளலாம்.

#எஸ்.எம்.எஸ்(SMS) மூலம் விஐடி பெறவேண்டுமென்றால் GVID space ஆதார் எண்ணின் கடைசி 4 அல்லது 8 இலக்க எண்களை டைப் செய்து 1947 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

#ரெசிடென்ட் இணையதளத்தில் ‘My Aadhaar’ ஆப்ஷனை கிளிக் செய்து ‘Aadhaar Services’ ஆப்ஷனை தேர்வு செய்து அதில் ‘Lock & Unlock’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் UID Lock radio பட்டனை கிளிக் செய்து முழு ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

ALSO READ  ஆன்லைன் திருட்டுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள "இரு மின்னஞ்சல்களை" பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தல்:

#பெயர்(name), பின் கோடு(pincode) ஆகிய விவரங்களையும் பதிவு செய்து செக்யூரிட்டி கோடு பூர்த்தி செய்ய வேண்டும். ஓடிபி வந்தபின் பூர்த்தி செய்து சப்மிட் செய்தால் உங்கள் ஆதார் எண் லாக் ஆகிவிடும்.

#அன்லாக் செய்வதற்கு Unlock Radio பட்டனை கிளிக் செய்து மேற்கூறியது போல விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். உடனே உங்கள் ஆதார் எண் அன்லாக் ஆகிவிடும்.

#ஆதார் ரெசிடெண்ட் இணையதளத்தில் ‘My Aadhaar’ ஆப்ஷனை கிளிக் செய்து ‘Aadhaar Services’ ஆப்ஷனை தேர்வு செய்து அதில் லக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் ஆதார் எண், விஐடி நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

#உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி பாஸ்வோர்டை பதிவு செய்து சப்மிட் செய்ய வேண்டும். உடனே உங்கள் பயோமெட்ரிக்ஸ் லாக் ஆகிவிடும். இதே முறையில் அன்லாக்கும் செய்துகொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்

Admin

அந்நிய மொழிகளில் உரையாடுவதை எளிமையாகியது கூகுள்..

Admin

பறக்கும் காரை தயாரிக்கும் Hyundai மற்றும் Uber நிறுவனங்கள்

Admin