தொழில்நுட்பம்

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைதளங்களில் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் முதல் முறை இந்தியாவில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

ALSO READ  கவின்கேர் நிறுவனம் இண்டிகா விற்பனையை அதிகரிக்க பாலிவுட் நக்ஷத்திரங்களுடன் புதிய ஒப்பந்தம்
அட்டகாசமான டிஸ்பிளே வசதி

இந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2340 × 1080 பிக்சல், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி,4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு உள்ளது. ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா, 32எம்பி செல்பீ கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், +2எம்பி டெப்த் சென்சார், + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீரர் விராட் கோலி பயன்படுத்தும் புதிய போன் இந்தியாவில் அறிமுகம்

Admin

சாம்சங் கேலக்ஸி Z போல்டு 2 ஸ்மார்ட்போன் விற்பனை நிறுத்தம் :

Shobika

மார்ச்சில் அறிமுகமாகும் oppoவின் அடுத்த மாடல் என்ன தெரியுமா

Admin