தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பின் அசத்தலான புதிய அப்டேட் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரின் பொழுபோக்கிலும் முதன்மை இடத்தில் இருக்கும் வாட்ஸ் அப்பில் அந்நிறுவனம் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது அட்டகாசமான அப்டேட் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனது பயன்பாட்டாளர்களை வெளியேறாமல் தடுக்கவும், புதிய பயன்பாட்டாளர்களை ஈர்க்கவும் வாட்ஸ்அப் பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே அட்வான்ஸ் சர்ச் ஆப்ஷன்(search option), ஸ்டோரேஜ்(storage) பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஸ்டிக்கர்கள்(stickers), அனிமேஷன்கள்(animation), புதிய ஐகான்கள்(icon) உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகிறது.

ALSO READ  கார்மின் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் :

இந்நிலையில் தற்போது வால்பேப்பர் அப்டேட்(wallpaper update) ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது . தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டு சோதனையில் இருக்கும் அந்த அப்டேட்டின்(update) மூலம் , பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட சாட்க்கும் (chat) தனித்தனியே வால்பேப்பரை(wallpaper) வைத்துக்கொள்ள முடியும் .

மேலும், கேலரியில் இருக்கும் புகைப்படங்களையும் தனித்தனியாக மாற்றிக்கொள்ள முடியும் . அதுமட்டுமின்றி டார்க் மோட்(dark mode) அல்லது லைட் மோட்(light mode) என்று ஒவ்வொரு சாட்டுக்கும்(chat) தனித்தனியே வைத்துக்கொள்ள முடியும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டங்ஸ்டன் இழை விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று

Admin

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய அம்சங்கள் அறிமுகம்…!!!!

Shobika

இந்தியாவில் போக்கோ F3 GT கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் :

Shobika