தொழில்நுட்பம்

பறக்கும் காரை தயாரிக்கும் Hyundai மற்றும் Uber நிறுவனங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Hyundai மற்றும் Uber நிறுவனங்கள் இணைந்து, பறக்கும் கார் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்துள்ளனர்.

Hyundai மற்றும் Uber உபெர் நிறுவனங்கள் இணைந்து பறக்கும் காரை உருவாக்கி வருகின்றன. புதிய பறக்கும் வாகனம், கான்செப்ட் எஸ்-ஏ1 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரு நிறுவனங்களின் கூட்டணியில், Hyundai நிறுவனம் பறக்கும் வாகனங்களை தயாரித்து வழங்கும். Uber மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வான்வழி சேவை, தரைவழி போக்குவரத்திற்கான இணைப்புகள், நுகர்வோர் Interface, ஏரியல் Ride Share நெட்வொர்க் மூலம் வழங்க இருக்கிறது.

ALSO READ  இந்தியாவில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ நிறுவனம் திட்டம் :

Hyundai நிறுவனம், Uber எலிவேட் உடன் இணைந்து, தனிப்பட்ட பறக்கும் வாகனமான எஸ்-ஏ1 மாடலை உருவாக்கி இருக்கிறது. இதன் மூலம், வாகனத்தை தரையில் இருந்து செங்குத்தாக மேலே பறக்கச் செய்து, தரையிறங்க வைக்க முடியும்.

புதிய கான்செப்ட் விமானம், மணிக்கு 290 கிலோமீட்டர் வேகத்திலும், தரையில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் பறக்கும் திறனையும் கொண்டது.மேலும், 100 கிலோமீட்டர் வரை தொடர்ச்சியாக இதனால் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நிஜ பறவை இறகுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இயந்திர பறவை

Admin

ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

Admin

மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்திய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்……

Shobika