உலகம்

நாடு கொடுமையான சூழலை சந்தித்துள்ளது : சீன அதிபர் ஜி ஜின்பிங்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிறப்பு கூட்டமொன்றை கூட்டிய சீன அதிபர் ஜி ஜிங்பின்
கரோனா வைரஸ் வேகமாக நாடுமுழுவதும் பரவி வருகிறது.

நாம் மிக கொடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளோம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்பு உலகை அச்சுறுத்திய சீனாவின் சார்ஸ் வைரஸ் போன்று வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சீன நகரமான வுஹான்(Wuhan) நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் அந்நாட்டு மக்களை புத்தாண்டை கொண்டாட விடாமல் கரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். 1300 க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ALSO READ  பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்க்கு நன்றி தெரிவித்த பெண் !

இந்நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அதிபர் தெரிவித்த கருத்தாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா (Xinhua) வெளியிட்ட அறிவிப்பில் ” இந்த புதிய கரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது, நாடு கொடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கிறது.

கட்சியின் மத்தியக் குழுவின் அனைத்து தலைமையையும் வலிமைப்படுத்திச் செயல்படுத்துவது அவசியமாகும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும், தடுப்பதற்கான வழிகளை உடனடியாக ஆராய வேண்டும், இந்த போராட்டத்தில் நிச்சயம் வெல்ல முடியும் என அதிபர் ஜின்பிங் தெரிவித்தார் ” எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 30 மாகாணங்களில் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ALSO READ  இரண்டு கற்கள் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரரான தொழிலாளி… 

18 நகரங்களுக்கு யாரும் செல்லக்கூடாது, எந்த வாகனங்களும் இயக்கக்கூடாது என்று சீனா போக்குவரத்து தடையைக் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் ஹூபேயில் மட்டும் 1.10 கோடிக்கும் (11 மில்லியன்) அதிகமான மக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 5.6 கோடி மக்கள் 18 நகரங்களில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே சீனாவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா அனைத்தையும் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாவை இயக்கும் ஹோட்டல்கள், விமானடிக்கெட் முன்பதிவு உள்ளிட்டவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் பழ வௌவால்களிடமிருந்து தான் பரவியுள்ளது. மேலும் பாம்புகளுக்கு இது வௌவால்கள் மூலம் பரவியுள்ளது.

சீனாவில் வௌவால் சூப்கள் மிகப்பிரபலம் அதேபோல் வைரஸ் தாக்கப்பட்ட வூஹான் மார்கெட்களில் விற்கப்பட்டுள்ளது. பாம்புகள் சீனர்களில் முக்கிய மெனு. இவைகளின் மூலமே இவ்வைரஸ் பரவியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் இலங்கையில் முதல் மரணம்….

naveen santhakumar

பிரிட்டன் இளவரசி திருமணம் ரத்து காரணம் என்ன…???

naveen santhakumar

குடை மிளகாய்குள் தவளை: அதிர்ச்சியில் தம்பதி

Admin