உலகம்

பாரீஸிற்கு சென்ற சீனப்பெண்… கொரோனோ வைரஸை பரப்பினாரா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் சீனப்பெண் ஒருவர் தான் கொரோனோ வைரஸ் தாக்கிய இடத்தில் இருந்து வந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. மேலும் தங்கள் நாடுகளில் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸுக்கு சீனாவில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவரை சோதனை செய்த அதிகாரிகள் அவர் கொரோனோ வைரஸ் தாக்கிய வுகன் நகரில் இருந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ALSO READ  கொரோனோ வைரசால் உயிரிழந்தால் நான்கு லட்சம் இல்லை- மத்திய அரசு திடீர் பல்டி. 

அவரிடம் விசாரிக்கையில் அவர் சீனாவில் சுகாதார சோதனைகளை கடந்தே வந்ததாகவும், பயணத்திற்கு முன் தனக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் மருந்து உட்கொண்டு அதனை குணப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக அப்பெண்ணை தொடர்பு கொண்ட சீன தூதரகம் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு எவ்வித நோய் தாக்குதலும் இல்லை என தெரிந்த பின்னரே பிரான்ஸ் அரசு நிம்மதியடைந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டவுட்டுக்கே இப்படியா…கொரோனாவால் ஒருவர் சுட்டுக்கொலை

Admin

புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்.

Admin

3வது முறையாக திருமணத்தை ஒத்திவைத்த பிரதமர்!

naveen santhakumar