உலகம்

பிரித்தானிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இந்தியர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரித்தானிய பட்ஜெட்டை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக் தாக்கல் செய்யவுள்ளார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரித்தானியா பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதன் பின் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்தார்.இந்நிலையில், அடுத்த மாதம் மார்ச் 11-ஆம் திகதி பிரித்தானியாவின் பட்ஜெட்டை ரிஷி சுனாக் தாக்கல் செய்கிறார்.

ALSO READ  பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் கொரோனா நிவாரணத்திற்கு பெரிய அளவில் நன்கொடை.......

இது அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், இந்தியர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு..

naveen santhakumar

Bank Of Japan வரலாற்றில் முதல் பெண் நிர்வாக இயக்குநர் நியமனம்.

naveen santhakumar

உலகம் முழுவதும் யூடியூப் தளத்தில் சிக்கல்….மக்கள் அவதி…..

naveen santhakumar